பெரிக்கத்தான் நே‌ஷனல் ஜோகூரில் ஆட்சி அமைக்காமல் போகக்கூடும்: முகைதீன்

பெரிக்கத்தான் நே‌ஷனல் ஜோகூரில் ஆட்சி அமைக்காமல் போகக்கூடும்: முகைதீன்

2 mins read
3c47e968-c99a-4f48-a8a3-607346eb608d
மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தில் நடுநிலையான பங்கை வகிக்கவும் அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் குறிப்பிட்ட இடங்கள் அவசியம் என்று பெர்சத்துக் கட்சித் தலைவர் முகைதீன் யாசின் கூறினார். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

https://www.straitstimes.com/asia/se-asia/johor-polls-bersatu-chief-muhyiddin-admits-opposition-pn-may-not-be-able-to-form-state-government

பத்து பகாட்: ஜோகூர் மாநிலத்தில் எதிர்த்தரப்பு பெரிக்கத்தான் நே‌ஷனல் கூட்டணியால் அரசாங்கத்தை அமைக்க முடியாமல் போகக்கூடும் என்று பெர்சத்துக் கட்சித் தலைவர் முகைதீன் யாசின் கூறியுள்ளார். அங்கு இம்மாதம் 11ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இருப்பினும், போதிய இடங்களைப் பெறுவதற்கு வாக்காளர்களின் ஆதரவு கூட்டணிக்குத் தொடர்ந்து கிடைப்பது முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார். மாநில அரசாங்க நிர்வாகத்தில் நடுநிலையான பங்கை வகிக்கவும் அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் குறிப்பிட்ட இடங்கள் அவசியம் என்று திரு முகைதீன் சொன்னார்.

மலாய் நாளேடான சினார் ஹரியான் அந்தத் தகவலை வெளியிட்டது.

பெரிக்கத்தான் நே‌ஷனல் கூட்டணி மாநில அரசாங்கத்தை அமைப்பதில் வெற்றிபெறாமல் போகக்கூடும் என்று திரு முகைதீன் கருதுகிறார். ஆயினும் சட்டமன்றத்தில் வலுவான எதிர்த்தரப்பு இடம்பெறுவது, மாநில அரசாங்கத்தின் ஒவ்வொரு கொள்கையும் செலவினமும் திறம்படக் கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்ய மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

பெரிக்கத்தான் நே‌ஷனல் கூட்டணிக்குப் போதிய இடங்கள் இருந்தால், மாநில அரசாங்கம் எந்தக் கேள்விக்கும் உட்படுத்தப்படாமல் அதன் விருப்பத்திற்கு இயங்க முடியாது என்று திரு முகைதீன் கூறினார்.

“சட்டமன்றத்தில் இந்த விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டால், மாநில நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதையும் அவர்கள் விளக்க வேண்டும்,” என்று முன்னாள் பிரதமருமான திரு முகைதீன் தெரிவித்தார்.

பாரித் ராஜாவில் உள்ள பெரிக்கத்தான் நே‌ஷனல் கூட்டணியின் முக்கியச் செயலக அறையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) நடைபெற்ற ‘பெரிக்கத்தான் ஃபார் ஜோகூர் டாக்’ நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

பாரித் ராஜா சட்டமன்றத் தொகுதிக்கான பெர்சத்துக் கட்சியின் வேட்பாளர் முகம்மது மாலிக்கி முகம்மது ரப்பீயும் அதில் கலந்துகொண்டார்.

மாநில அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் எதிர்த்தரப்பாகப் பெரிக்கத்தான் நே‌ஷனலின் பணி மிக முக்கியமானதாக இருக்கும் என்றார் திரு முகைதீன்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஜோகூர்தேர்தல்பெர்சத்துபெரிக்கத்தான் நேஷனல்