இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீன செய்தியாளர் கொல்லப்பட்டார்: மருத்துவ உதவியாளர்கள்

இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீன செய்தியாளர் கொல்லப்பட்டார்: மருத்துவ உதவியாளர்கள்

1 mins read
1ce2a02b-856c-4327-9e3b-c420ffd0eb48
இஸ்ரேலியத் தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர்கள் இருந்த கூடாரம். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

காஸா: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன செய்தியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக மருத்துவ உதவியாளர்களும் உள்ளூர் செய்தியாளர் ஊழியரணியினரும் தெரிவித்துள்ளனர்.

தெற்கு காஸாவில் உள்ளூர் செய்தியாளர்கள் பயன்படுத்திய கூடாரம் இஸ்ரேலிய ஆகாயப் படைத் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் கூடாரத்தில் மூண்ட தீயை மக்கள் அணைக்க முயன்றது காணொளியில் காணப்பட்டது. அந்தக் கூடாரம், திங்கட்கிழமை காலை கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனை வளாகத்தில் இருந்தது.

அந்தக் காணொளியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சரிபார்த்தது. செய்தியாளர் ஒருவர் தீப்பிடித்து எரிந்தது போலவும் வேறொருவர் அவரைக் காப்பாற்ற முயன்றது போலும் காட்டும் படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டன.

இதுகுறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை. இஸ்ரேலியத் தாக்குதலில் இன்னொரு பாலஸ்தீனர் ஒருவரும் கொல்லப்பட்டதாக காஸா மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

ஹெல்மி அல்-ஃபக்காவி என்ற மாண்ட செய்தியாளரின் இறுதிச் சடங்கில் செய்தியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையில் 210க்கும் அதிகமான செய்தியாளர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்
உலகம்இஸ்ரேல்காஸாதாக்குதல்செய்தியாளர்