அமெரிக்க அதிபர் டிரம்ப்பைக் கொலை செய்ய முயன்ற பாகிஸ்தான் ஆடவர்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பைக் கொலை செய்ய முயன்ற பாகிஸ்தான் ஆடவர்

1 mins read
12fc025b-ba6e-4c28-aac8-6f637ad6947a
ஈரானுடன் தொடர்புடைய ஆசிஃப் ரஸா மெர்ச்சன்ட், திரு டிரம்ப்புடன் பிற அமெரிக்க அதிகாரிகளையும் கொலை செய்ய முயன்றார். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைக் கொலை செய்ய முயன்ற குற்றத்தைப் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் புரூக்ளின் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஈரானுடன் தொடர்புடைய ஆசிஃப் ரஸா மெர்ச்சன்ட், திரு டிரம்ப்புடன் பிற அமெரிக்க அதிகாரிகளையும் கொலை செய்ய கூலிப் படையை அணுக முற்பட்டதையும் குறிப்பிட்டார்.

ஈரானின் ராணுவத் தளபதி கசாம் சொலைமானியை அமெரிக்க ராணுவம் 2022ஆம் ஆண்டு கொலை செய்ததன் விளைவாக திரு டிரம்ப் உள்ளிட்டோரைக் கொல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று மெர்செண்ட் சாட்சியமளித்தார்.

2020ஆம் ஆண்டு பாக்தாத்தில் தொடுக்கப்பட்ட தாக்குதலின்போது அமெரிக்காவின் ஆளில்லா வானூர்தி தாக்கி ஈரானியத் தளபதி சொலைமானி கொல்லப்பட்டார். அந்தக் கொலைக்குப் பழிவாங்கப்போவதாக ஈரான் பலமுறை சூளுரைத்துள்ளது.

இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவத்திடமிருந்து தமது குடும்பத்தைக் காப்பாற்ற திரு டிரம்ப் உள்ளிட்டோரைக் கொல்ல முயன்றதாக மெர்ச்சன்ட் மார்ச் 4ஆம் தேதி குறிப்பிட்டார்.

எனினும், கொலை முயற்சி நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே தாம் பிடிபட்டுவிடுவோம் என்ற எண்ணம் இருந்ததாகவும் அவர் சொன்னார்.

திரு டிரம்ப்பைத் தவிர அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன், முன்னாள் ஐக்கிய நாட்டு நிறுவனத் தூதர் நிக்கி ஹேலி ஆகியோரையும் கொலை செய்யத் திட்டமிட்டதாக மெர்ச்சன்ட் கூறினார்.

மெர்ச்சன்டின் வழக்கு பின்னொரு நாளில் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

2024ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அமெரிக்காவைவிட்டு புறப்படவிருந்த மெர்ச்சன்ட் கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்