விமானங்களில் ஒரு பயணிக்கு இரண்டு கைப்பேசி மின்தேக்கிகளுக்கு மட்டுமே அனுமதி

விமானங்களில் ஒரு பயணிக்கு இரண்டு கைப்பேசி மின்தேக்கிகளுக்கு மட்டுமே அனுமதி

1 mins read
b8998cea-19b1-4455-8e8e-a9801190f1c0
மேலும், விமானப் பயணத்தின்போது பயணிகள் கைப்பேசி மின்தேக்கிகளுக்கு, மின்னூட்டம் செய்வதற்கும் தடை விதிக்கப்படும் - படம்: அன்ஸ்பிளாஸ்
Google News Preferred Icon

மாண்ட்ரியல்/வாஷிங்டன்: விமானப் பயணத்தின்போது கைப்பேசி மின்தேக்கிகள் பயன்படுத்துவதற்கான புதிய விதிகளின் ஒரு பகுதியாக, மார்ச் 27 முதல் விமானங்களில் ஒரு பயணிக்கு இரண்டு என வரம்பு விதிக்கப்படும் என்று ஐக்கிய நாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், விமானப் பயணத்தின்போது பயணிகள் கைப்பேசி மின்தேக்கிகளுக்கு, மின்னூட்டம் செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

2025ல் ஏர் புசான் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து, லுஃப்தான்சா குழுமம் போன்ற விமான நிறுவனங்களும், தென் கொரியா போன்ற நாடுகளும் ஏற்கெனவே விமானங்களில் கைப்பேசி மின்தேக்கிகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்திடம் உடனடியாகக் கருத்து கேட்க முடியவில்லை.

மான்ட்ரியலைத் தலைமையிடமாகக் கொண்ட அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு, பொதுவாக விமானப் போக்குவரத்திற்கான உலகளாவிய தரநிலைகளை நிர்ணயிக்கிறது.

அவை பெரும்பாலும் அதன் 193 உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்படுகின்றன. இருப்பினும், கைப்பேசி மின்தேக்கிகள் தொடர்பான புதிய விவரக்குறிப்புகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்