இந்த நாட்டில் இருபதைவிட 40 வயதைக் கடந்த மணப்பெண்கள் அதிகம்

இந்த நாட்டில் இருபதைவிட 40 வயதைக் கடந்த மணப்பெண்கள் அதிகம்

1 mins read
61ba1302-ef8d-4fe9-8c68-435c823d56e1
தென்கொரியாவில் 2022ஆம் ஆண்டு 40 முதல் 44 வயதிற்குட்பட்ட 10,949 பெண்கள் முதன்முறையாகத் திருமணம் செய்துகொண்டனர். மாதிரிப்படம்: அன்ஸ்பிலாஷ் -
Google News Preferred Icon

தொடர்ந்து ஈராண்டுகளாக, 40 வயதைக் கடந்தபின் முதன்முறையாகத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணிக்கை, 20 வயதைக் கடந்தபின் மணக்கும் பெண்களைவிட அதிகமாகப் பதிவாகியுள்ளது.

தென்கொரியாவில்தான் இந்நிலை நீடிக்கிறது.

அந்நாட்டு அரசாங்கம் இன்று திங்கட்கிழமை (மார்ச் 20) வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, கடந்த 2022ஆம் ஆண்டில் 40 முதல் 44 வயதிற்குட்பட்ட 10,949 பெண்கள் முதன்முறையாகத் திருமணம் செய்துகொண்டனர். அதே காலகட்டத்தில், 20 முதல் 24 வயதுக்குட்பட்ட 10,113 பெண்கள் முதன்முறையாக திருமண உறவில் நுழைந்தனர்.

கடந்த 1997ஆம் ஆண்டு தென்கொரியாவில் 388,960 திருமணங்கள் நடந்தன. ஒப்புநோக்க, 2021ஆம் ஆண்டில் அதில் பாதிக்கும் குறைவான எண்ணிக்கையிலான, அதாவது 191,690 திருமணங்களே நடந்தன.

அதேபோல், 25 ஆண்டுகளுக்குமுன் 20களில் இருந்த பெண்கள் 136,918 பேர் திருமணம் செய்துகொண்டனர். இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 10,113ஆகக் குறைந்தது.

தென்கொரியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு 40களில் இருந்த 15,000 ஆண்களும் 20களில் இருந்த 44,000 ஆண்களும் முதன்முறையாக திருமண உறவில் அடியெடுத்து வைத்தனர்.