வடகொரியாவிடம் 2,000 கிலோ யுரேனியம் உண்டு: தென்கொரியா

வடகொரியாவிடம் 2,000 கிலோ யுரேனியம் உண்டு: தென்கொரியா

1 mins read
cecac388-6fd3-41ee-83e0-20eb0e73e80a
வடகொரியா அணுவாயுதத்தை வைத்துக்கொள்ள முடியும் என்றால் அமெரிக்காவுடன் பேசத் தயார் என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சோல்: வடகொரியாவிடம் 2,000 கிலோகிராம் எடையுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக நம்பப்படுகிறது என்று தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

அணுவாயுதங்களை உருவாக்குவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் செரிவூட்டப்பட்ட யுரேனியத்தை நீண்டகாலமாக வடகொரியா அதிக அளவில் வைத்திருப்பதாகத் தென்கொரியத் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

இதற்கிடையே, தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சர் சங் டொங் யங் வடகொரியாவிடம் 90 விழுக்காடு அதாவது 2,000 கிலோ எடையுள்ள செரிவூட்டப்பட்ட தூய யுரேனியம் இருப்பதாகப் பகிரங்கமாக உறுதிபடுத்தினார்.

இப்போதுகூட வடகொரியாவின் யுரேனிய மையங்கள் நான்கு தளங்களில் செயல்படுவதாக திரு சங் செய்தியாளர்களிடம் கூறினார்.

“ஒரேயொரு அணுகுண்டை உருவாக்க 5 முதல் 6 கிலோ எடையுள்ள புளூட்டோனியம் தேவை,” என்ற அவர், புளூட்டோனியம் உற்பத்திக்கென அந்த 2,000 கிலோ சேமித்துவைக்கப்படுகிறது என்று கூறினார். அது அதிக எண்ணிக்கையில் அணுவாயுதத்தை உருவாக்கப் போதுமானது என்றும் அவர் கூறினார்.

வடகொரியாவின் அணுவாயுதத் தயாரிப்பை அவசரமாகத் தடுத்து நிறுத்துவது அவசியம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
வடகொரியாஅணுவாயுதம்தென்கொரியா