மருத்துவத்துக்கான நோபெல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு

மருத்துவத்துக்கான நோபெல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு

1 mins read
ff8e9e20-1f14-4a94-9d8b-d1be1a0344e5
மருத்துவத்துக்கான நோபெல் பரிசு வென்ற (இடமிருந்து) மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஸ்டாக்ஹோம்: இவ்வாண்டின் மருத்துவத்திற்கான நோபெல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் ஷிமோன் சகாகுச்சி, அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த அவர்களின் கண்டுபிடிப்புக்காக இப்பரிசு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளியல் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியோருக்கும் அமைதிக்காகப் பாடுபட்டவா்களுக்கும் உலகளவில் உயரிய விருதாகக் கருதப்படும் நோபெல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

தங்கப் பதக்கம், சான்றிதழ், 1.56 மில்லியன் (1.2 மில்லியன் அமெரிக்க வெள்ளி) ஆகியவை நோபெல் பரிசு வென்றவருக்குப் பரிசாக அளிக்கப்படுகின்றன.

மருத்துவத்திற்கான நோபெல் பரிசு திங்கட்கிழமை (அக்டோபர் 6) அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளியல் ஆகிய துறைக்களுக்கான பரிசுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்படவுள்ளன.

குறிப்புச் சொற்கள்
நோபெல்பரிசுமருத்துவம்