ஸ்டாக்ஹோம்: இவ்வாண்டு நோபல் பரிசு வெல்வோருக்கு 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா (1.34 மில்லியன் சிங்கப்பூர் டாலர்) பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று அவ்விருதுகளை வழங்கும் நோபெல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக நோபெல் பரிசுத்தொகையில் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அறக்கட்டளையின் நிதிநிலைக்கு ஏற்ப பரிசுத்தொகையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டுக்கான தொகையில் ஒரு மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா அதிகரித்து வழங்கப்பட இருப்பதாகவும் நோபெல் அறக்கட்டளை கூறியது.
கடந்த 2012ஆம் ஆண்டில் பரிசுத்தொகை 10 மில்லியன் குரோனாவிலிருந்து 8 மில்லியனாகக் குறைக்கப்பட்டது என்றும் அது 2017ஆம் ஆண்டு 9 மில்லியனாகவும் பின்னர் 2020ஆம் ஆண்டு 10 மில்லியனாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது என்றும் அது தெரிவித்தது.

