உறவுகளைப் புதுப்பிக்க தென்கொரியா, ஜப்பான் ஒப்புதல்

உறவுகளைப் புதுப்பிக்க தென்கொரியா, ஜப்பான் ஒப்புதல்

1 mins read
058786f2-e2c2-4439-a82a-790e1a0fee6a
அரசியல் கொள்கையில் இடசாரி சாயல் கொண்டுள்ள திரு லீ ஜே மியூங், கடந்த வாரம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சோல்: தென்கொரியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் லீ ஜே மியூங், ஜப்பானியப் பிரதமர் ஷிகெரூ இஷிபாவுடன் தொலைபேசி அழைப்பில் இணைந்து இருநாட்டு உறவுகளைப் புதுப்பிக்க ஒப்புக்கொண்டதாகத் தென்கொரிய அதிபருக்கான பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்பான விவகாரங்கள் குறித்து இணைந்து செயல்படப் போவதாக அந்த இரண்டு தலைவர்களும் குறிக்கோள் கொண்டுள்ளதை அடுத்து இந்தத் தொலைபேசி அழைப்பு நிகழ்ந்தது. 

அந்த அழைப்பு கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் நீடித்தது.

அரசியல் கொள்கையில் இடசாரி சாயல் கொண்டுள்ள திரு லீ, கடந்த வாரம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடைமுறைவாத கொள்கையைக் கொண்டுள்ளதாகக் கருதப்படும் திரு லீ, பாதுகாப்பு ஒத்துழைப்பை தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் தொடரப்போவதாக தென்கொரிய அதிபர்ப் பேச்சாளரான காங் யூ ஜுங் தெரிவித்தார்.

ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான இருநாட்டு உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருவாட்டி காங், அவ்விரு நாட்டுத் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துத் தங்கள் உறவை மேம்படுத்த இசைந்ததாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
அதிபர்பிரதமர்தென்கொரியாஜப்பான்