நெட்டன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம்: டிரம்ப்

நெட்டன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம்: டிரம்ப்

1 mins read
d5676946-8aff-4a00-a8e4-16a5b4d75c85
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பாம் பீச்சின் மார்-அ-லகோ பொழுதுபோக்குத்தலத்தில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை (இடம்) கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி வரவேற்றார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வா‌‌ஷிங்டன்: இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 24) நடைபெற்ற வெள்ளை மாளிகைச் செய்தியாளர்கள் சங்க இரவு விருந்து நிகழ்ச்சியில் திரு டிரம்ப் பேசியபோது அந்தத் தகவலை வெளியிட்டார்.

அமெரிக்க செனட்டர் சக் ‌‌‌ஷூமரை அவர் வேண்டுமென்றே பாலஸ்தீனர் என்று குறிப்பிட்டார்.

“அடுத்த வாரம் நெட்டன்யாகு நகருக்கு வரும்போது அவரை வரவேற்பதற்காக, நாளை ஷூமருக்கு அழகிய பாலஸ்தீனிய ஆடையை அனுப்பப்போகிறேன்,” என்று திரு டிரம்ப் கூறினார்.

யூத சமயத்தைச் சேர்ந்த ஷூமர், பாலஸ்தீனராக மாறிவிட்டதாய் அவர் சொன்னார்.

ஷரியா சட்டம்தான் ஷூமரின் ‘புதிய கொள்கை’ என்றும் திரு டிரம்ப் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

செனட் சபையின் மூத்த ஜனநாயகக் கட்சித் தலைவரான திரு ஷூமரைப் பாலஸ்தீனர் என்று டிரம்ப் அழைத்ததை அமெரிக்க முஸ்லிம், யூத உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன. திரு டிரம்ப் இந்த வார்த்தையை அவமதிப்பாகவும் இழிவாய்ப் பயன்படுத்துவதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்தன.

இஸ்ரேலியப் பிரதமர் திங்கட்கிழமை வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபரைச் சந்திப்பார் என்றும் திரு நெட்டன்யாகுவின் அலுவலகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்து ஐந்து ஆண்டுகள் முடியும் நிலையில் திரு டிரம்ப்பும் திரு நெட்டன்யாகுவும் சந்திக்கவிருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஅதிபர்டோனல்ட் டிரம்ப்இஸ்ரேல்பிரதமர்பெஞ்சமின் நெட்டன்யாகு