ஆசிரியரை சுட்ட 6 வயது அமெரிக்க சிறுவனின் தாயாருக்கு 21 மாத சிறை

ஆசிரியரை சுட்ட 6 வயது அமெரிக்க சிறுவனின் தாயாருக்கு 21 மாத சிறை

2 mins read
41b1ebfe-4199-41b2-80fe-0da3f0b898a4
வெர்ஜினியா நகர ரிச்நெக் பாலர் பள்ளியில் காவல் துறையினர். - படம்: ராய்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: வெர்ஜினியா நகரில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாலர் பள்ளி ஆசிரியர், கைகளிலும் நெஞ்சிலும் படுகாயமடைந்தார். துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவனின் தாய் தெஜா டெய்லருக்கு 26, கள்ளத் துப்பாக்கி வாங்கிய குற்றத்துக்காக 21 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாதின் மகன் அந்தத் துப்பாக்கியைப் பள்ளிக்கு எடுத்துச் சென்று அவரின் ஆசிரியரை சுட்டுவிட்டான்.

ஆசிரியர் 2 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். துப்பாக்கியை வாங்கும்போது அரசாங்க ஆவணங்களில் பொய் வாக்குறுதி அளித்ததை தாய் ஒப்புக்கொண்டார்.

குழந்தைப் பராமரிப்பில் புறக்கணிப்புக் குற்றத்தையும் அந்தத் தாய் மீது அரசாங்க வழக்கறிஞர்கள் சுமத்தியிருந்தனர்.

துப்பாக்கிச் சூடு குற்றங்களை பல இளம் வயதினர் செய்துவருவதால், துப்பாக்கி வைத்திருக்கும் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்க நீதித் துறை உள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். குற்றவாளியின் தந்தை, மகனுக்காக பொறுப்பின்றி ஆயுதத்தை வாங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

2021ல் நவம்பர் மாதத்தில், மிச்சிகன் நகரின் ஓக்லாந்து நகரில் மேல்நிலைப் பள்ளியில் 15 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டனர். மகன் ஆபத்தானவன் என்று அறிந்தும் ஆயுதத்தை வாங்கித் தந்தாகப் பெற்றோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்