அழகான பெண், யுஎஸ் $1 பில்லியன்: உகாண்டா ராணுவத் தலைவர் கேட்கும் ஊதியம்

அழகான பெண், யுஎஸ் $1 பில்லியன்: உகாண்டா ராணுவத் தலைவர் கேட்கும் ஊதியம்

1 mins read
முப்பது நாள்களுக்குள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் துருக்கி தூதரகம் மூடப்படும் என எச்சரிக்கை
3cf3687e-1118-4964-99e2-363ad9aa6824
உகாண்டா ராணுவத் தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா, அந்நாட்டு அதிபர் யோவேரி முசெவேனியின் மகன் ஆவார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கம்பாலா: சோமாலியாவில் இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உகாண்டா ராணுவம் நீண்டகாலமாக மேற்கொண்டு வரும் பாதுகாப்புப் பங்களிப்பிற்கான ஊதியமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று உகாண்டா ராணுவத் தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா துருக்கியிடம் கேட்டுள்ளார்.

அத்துடன், அந்நாட்டின் ‘மிக அழகான பெண்ணைத்’ தனக்கு மணம் முடித்துத் தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

முப்பது நாள்களுக்குள் இக்கோரிக்கைகளைத் துருக்கி நிறைவேற்றாவிட்டால், கம்பாலாவில் உள்ள துருக்கியத் தூதரகம் மூடப்படும் என்றும், உகாண்டா வான்வெளியில் துருக்கி ஏர்லைன்ஸ் பறக்கத் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

துருக்கி தனக்கு துரோகம் இழைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், உகாண்டா மக்கள் பாதுகாப்புக் கருதித் துருக்கி செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக 100,000 வீரர்களை அனுப்பத் தயார்

மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக 100,000 வீரர்களை அனுப்பத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கள் குறித்து துருக்கியோ சோமாலியாவோ இதுவரை அதிகாரபூர்வமாகப் பதிலளிக்கவில்லை.

உகாண்டா அரசும் இது குறித்து விளக்கம் அளிக்கவில்லை.

உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனியின் மகனான முஹூசி, 2022ல் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியைத் திருமணம் செய்ய 100 பசுக்களைப் பரிசாக அளிப்பதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்உகாண்டாமணப்பெண்அழகான பெண்மாதுராணுவம்தளபதிகோரிக்கைதுருக்கி