வழக்கநிலைக்குத் திரும்பிய மணிலா விமானநிலையம்

வழக்கநிலைக்குத் திரும்பிய மணிலா விமானநிலையம்

1 mins read
8ce01f08-6fd6-4c3e-ab25-512c0e1c0921
படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நின்னோய் அக்யூனோ அனைத்துலக விமான நிலையம் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது.

விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் ஏற்பட்ட மின்தடையால் 48 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் நீடித்த மின்தடை தற்போது சரிசெய்யப்பட்டு சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்தடையின்போது அவசர உதவிக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. அதன்மூலம் குடிநுழைவு, விமான நிறுவனங்களின் கணினிகள் போன்ற முக்கிய சேவைகள் தடையில்லாமல் இயங்கின.

பாதிக்கப்பட்ட உள்நாட்டு விமானச் சேவைகள் அனைத்தும் சீபு பசிபிக் நிறுவனத்தைச் சேர்ந்தவை. வாடிக்கையாளர்கள் பயணச்சீட்டை வேறு ஒரு நாளுக்கு மாற்றிக்கொள்ளலாம் அல்லது பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

மூன்று நாள் வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டது.

விமான நிலையத்தில் நான்கு மாதங்களுக்கு முன்னர் இதே போன்று மின்தடை ஏற்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்