பிரபல காற்பந்து வீரரின் நண்பர் எனக் கூறி $98,000 மோசடி

1 mins read
2dbef907-9108-4855-b1a6-5b34095c1085
தென்கொரியாவின் நட்சத்திரக் காற்பந்து வீரர் சோன் ஹியுங்- மின் - படம்: இபிஏ

சோல்: தென்கொரியாவின் நட்சத்திரக் காற்பந்து வீரர் சோன் ஹியுங்- மின்னின் நெருங்கிய நண்பர் எனக்கூறி ஆடவர் ஒருவர் 98,000 வெள்ளி மோசடி செய்துள்ளார்.

மோசடிக்குள்ளானவர் ஒரு பெண் என்றும் அவரை சந்தேக நபர் காதலித்து ஏமாற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபருக்கு 30 வயது இருக்கும் என்றும் அவர் முன்னாள் காற்பந்து வீரர் என்றும் கூறப்படுகிறது. ஆடவர் 2021ஆம் அப்பெண்ணிடம் இருந்து 19 முறை பணம் வாங்கியுள்ளார்.

பொழுதுபோக்கு தொடர்பான வர்த்தகத்தை தொடங்க பணம் தேவைப்படுகிறது என்று கூறி ஆடவர் பெண்ணிடம் இருந்து பணம் வாங்கியுள்ளார்.

தமது பல மில்லியன் டாலர் பணம் அதிகாரிகளால் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளது, விரைவில் பணத்தை திருப்பி தந்துவிடுவேன் என ஆடவர் அப்பெண்ணிடம் தொடர்ந்து பணம் வாங்கியுள்ளார்.

மேலும் ஆடவர் சோன் ஹியுங்- மின்னுடன் இருக்கும் படத்தையும் காட்டியுள்ளார். அந்தப்படம் 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படமாகும்.

பணத்தை ஆடவர் திருப்பித் தர மறுத்துவிட்டதால் அந்தப் பெண் 2022ஆம் ஆண்டு காவல்துறையில் புகார் கொடுத்தார்.

அதன்பிறகு ஆடவர் தலைமறைவானார். விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்