விமானத்தில் அவசரகால கதவை திறக்க முயன்றதாகக் கூறி ஆடவர் கைது

1 mins read
70a7009e-1806-4694-be3b-d2447e208102
படம்: ஏஎஃப்பி -

அமெரிக்காவில் வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்றதாகச் சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (மார்ச் 6) லாஸ் ஏஞ்சலிஸ் இருந்து பாஸ்டன் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்தது.

அந்த ஆடவர், விமானச் சிப்பந்தி ஒருவரின் கழுத்தில் கத்தியால் குத்த முயன்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகப் பேர்வழி, மசசூசெட்ஸ் மாநிலத்தின் லியோமின்ஸ்டரைச் சேர்ந்த 33 வயது ஃபிரான்சிஸ்கோ டோரஸ்.

விமானம் தரையிறங்க கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் இருந்தபோது, விமானிகளின் அறையில் அவசரகால கதவு திறக்கப்படும் நிலையில் உள்ளதாக எச்சரிக்கை ஒலி ஒலித்தது.

அதனை விமானச் சிப்பந்தியும் உறுதிசெய்ய, விமானிகள் அக்கதவை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.

டோரசின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக மற்றொரு சிப்பந்தியும் தெரிவித்தார். அதனையடுத்து, டோரசிடம் விசாரிக்க, அது வாக்குவாதமாக மாறி, விமானத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விமானம் தரையிறங்கிய பிறகு டோரஸ் கைது செய்யப்பட்டார். அவர்மீதான வழக்கு விசாரணை மார்ச் 9ஆம் தேதி நடக்கவுள்ளது

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்