சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார் மகாதீர்

சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார் மகாதீர்

1 mins read
a7550401-148b-4a65-b672-5c17f3ee485b
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது மருத்துவமனை சிகிச்சை முடிந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது செவ்வாய்க்கிழமை தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை முடிந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கு வயது 98. அவர் தொற்றுக்கு சிகிச்சை பெற தேசிய இதய நிலையத்தில் (ஐஜேஎன்) அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அந்தத் தொற்று குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவரை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டது.

டாக்டர் மகாதீர் நலமாக உள்ளார் என்றும் சிகிச்சை முடிந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனுபவமிக்க அரசியல்வாதியான அவர், பல ஆண்டுகளாக பல உடல்நலக் கோளாறுகளுக்கு சிகிச்சைபெற்று வருகிறார். அவருக்கு பலமுறை  மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் 2007ஆம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
மலேசியா