மலேசியப் பொருளியல் மீள்திறனுடன் இருக்கும்: மலேசியப் புள்ளிவிவரத்துறை

மலேசியப் பொருளியல் மீள்திறனுடன் இருக்கும்: மலேசியப் புள்ளிவிவரத்துறை

1 mins read
0e55c6a2-75fe-4e65-bd2e-201c808a5b20
மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் நிலையாக இருக்கும் என்று அந்நாட்டுப் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் நிலையாக இருக்கும் என்று அந்நாட்டுப் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பதிவான முன்னோடிப் பொருளியல் குறியீடு 113.9 புள்ளிகளிலிருந்து 0.1 விழுக்காடு அதிகரித்து 114.0 புள்ளிகளானது.

பொருளியல் எந்தத் திசையில் செல்லும் என்பதையும் வர்த்தகச் சுழற்சி எப்படி இருக்கும் என்பதையும் முன்னோடிப் பொருளியல் குறியீட்டைக் கொண்டு கணிக்க முடியும்.

நாணய விநியோகமும் பகுதிமின்கடத்திகளின் இறக்குமதியும் அதிகரித்ததால் முன்னோடிப் பொருளியல் குறியீடு 0.1 விழுக்காடு கூடியதாகப் புள்ளிவிவரத்துறை குறிப்பிட்டது. வளர்ச்சியடையும் புதிய பொருளியலின் ஆதரவுடன் மலேசியாவின் பொருளியல் மீள்திறனுடன் இருக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

அதன்மூலம் உள்ளூர் வர்த்தகங்கள், சுற்றுலாத் துறை போன்ற பிற பொருளியல் நடவடிக்கைகள் மறைமுகமாகப் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய பொருளியல் சூழ்நிலையை மதிப்பிடும்போது, ஒன்றியக் குறியீடு நல்ல வளர்ச்சியைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு வருடாந்திர வளர்ச்சி 126.6 புள்ளிகளிலிருந்து 2.1 புள்ளி வளர்ச்சியடைந்து 129.3 புள்ளிகளானது. இருப்பினும் மாதாந்தர அடிப்படையில் ஒன்றியக் குறியீடு 0.02 புள்ளி சரிந்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபொருளியல்வளர்ச்சிநீடித்த நிலைத்தன்மை