மணவிலக்கு செய்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த தம்பதி

மணவிலக்கு செய்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த தம்பதி

1 mins read
f891f2a3-086b-4629-b4df-fb22f7b87274
இம்முறையாவது ஒன்றாக வாழ்வோம் என்ற நம்பிக்கையுடன் இத்தம்பதி உள்ளனர். படம்: லினா லீனா/ஃபேஸ்புக் -
Google News Preferred Icon

மலேசியாவில் உள்ள ஒரு தம்பதி, 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருமணம் செய்துகொண்டனர்.

செல்வி ஹவாஸலினாவும், 46, திரு முஹமட் எஸ்வானி அஹமட் நஸேரியும், 45, திருமணம் செய்து இரண்டு ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன் பிறகு 2002 ஜூன் மாதம் அவர்கள் மணவிலக்கு பெற்றனர்.

இந்த நிலையில் இருவரும் மீண்டும் திருமணம் செய்துகொண்டனர்.

மணவிலக்கு பெற்ற பிறகு இருவருக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஆனால் ஹவாஸலினாவின் தாயார் மறைந்தபோது, ஃபேஸ்புக்கில் இரங்கல் செய்தியை முஹமட் எஸ்வானி பதிவிட்டிருந்தார். தம் முன்னாள் மனைவியின் தாயார் மறைந்த செய்தியை நண்பர் மூலமாக அவர் அறிந்திருந்தார். இதையடுத்து மீண்டும் இருவரும் தொடர்புகொண்டனர்.

பல ஆண்டுகள் ஆனதால் ஆரம்பத்தில் எஸ்வானியை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. முகமெல்லாம் மாறிவிட்டது என்று ஹவாஸலினா தெரிவித்தார்.

"ஃபேஸ்புக் நண்பர்களாக இருப்போம் என்று அவர் கூறினார். அதிலிருந்து நாங்கள் இருவரும் தொடர்ந்து எங்களுடைய பழைய வாழ்க்கையைப் பற்றிப் பேசினோம். பின்னர் நாம் இருவரும் ஒன்றுசேரலாம் என்று எஸ்வானி கூறினார். நான் உடனே ஏற்றுக்கொண்டேன்," என்று ஹவாஸலினா கூறினார்.