சிறந்த ‘ஏஐ’ சூழலை உருவாக்க உறுதுணையாக இருப்போம்: மலேசியா

சிறந்த ‘ஏஐ’ சூழலை உருவாக்க உறுதுணையாக இருப்போம்: மலேசியா

2 mins read
572fed7b-994b-45c8-81ee-62cdbd8ffa56
மலேசியாவின் மின்னிலக்க அமைச்சர் கோபிந் சிங் டியோ. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியா, சிறந்த உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சூழலை உருவாக்க உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டின் மின்னிலக்க அமைச்சர் கோபிந்த் சிங் டியோ.

அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவிற்கு அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவின் மின்னிலக்க வளர்ச்சி குறித்து அந்தப் பயணத்தில் பேசப்பட்டிருந்தது.

மேலும் இந்தியாவில் நடக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாட்டில் கலந்துகொள்ளவும் திரு மோடி மலேசியாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் ஏஐ மாநாடு குறித்து அமைச்சர் கோபிந்த், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“மாநாட்டிற்கு அழைப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. உலகின் தெற்குப் பகுதியில் நடக்கும் முதல் உலகளாவிய ஏஐ மாநாடு இது. ஏஐ மேம்பாட்டில் அனைவரையும் உள்ளடக்கியும், பொறுப்பான முறையில் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய இந்த மாநாடு உதவியது,” என்று திரு கோபிந் குறிப்பிட்டார்.

“இந்தியாவின் ஏஐ மாநாடு மூன்று முக்கிய கொள்கைகளான மக்கள், உலகம், முன்னேற்றம் ஆகிய அரசியல் அறிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மாநாட்டில் ‘ஏஐ’யால் ஏற்படும் விளைவுகள், எப்படி ஒற்றுமையாகச் செயல்படுவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது,” என்றார் அவர்.

“மனிதக் குலத்திற்குச் செயற்கை நுண்ணறிவின் சேவை, அனைவரையும் உள்ளடக்கிய பொருளியல் வளர்ச்சி, மக்களை முன்னிறுத்திய புத்தாக்கம், பூமியைக் காப்பது ஆகியவற்றில் நாடுகள் உறுதியாக உள்ளன,” என்றும் அமைச்சர் கோபிந் குறிப்பிட்டார்.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி ஏஐ மாநாடு தொடங்கியது. அதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 35,000க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளும் உரையாற்றி உலகின் கவனத்தை ஈர்த்தனர்.

குறிப்புச் சொற்கள்
ஏஐமாநாடுஇந்தியாமலேசியா