மலேசிய விமான நிறுவனங்கள் சில சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தலாம்: அமைச்சு

மலேசிய விமான நிறுவனங்கள் சில சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தலாம்: அமைச்சு

1 mins read
78a61399-c0dd-4f98-9ea3-b63b16134861
விமான நிறுவனங்களின் மொத்தச் செயல்பாட்டுச் செலவில் கிட்டத்தட்ட பாதி எரிபொருளுக்கானது என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறியுள்ளார். - படம்: புளூம்பர்க்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மத்திய கிழக்குப் போர் காரணமாக எரிபொருள் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயருமேயானால், மலேசிய விமான நிறுவனங்கள் சில விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருக்கும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

விமான நிலைய நிர்வாகிகள், எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் வியாழக்கிழமை (மார்ச் 12) நடத்திய ஆலோசனைக்குப் பிறகு அவர் ஃபேஸ்புக்கில் இவ்வாறு பதிவிட்டார்.

விமான நிறுவனங்களின் மொத்தச் செயல்பாட்டுச் செலவில் கிட்டத்தட்ட பாதி எரிபொருளுக்கானது என்றார் அவர்.

உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க விமான நிலையங்கள், பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.

நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களைக் கருத்தில்கொண்டு, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான விமானச் சரக்குச் சேவைகள் தடையின்றிச் செயல்படுவதை உறுதிசெய்வது தற்போதைய முக்கிய இலக்கு என்று அமைச்சர் கூறினார்.

நிலைமை மாறிக்கொண்டே இருப்பதால், வாரந்தோறும் கூட்டங்களை நடத்தி விரைவான முடிவுகளை எடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் திரு ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாவிமானப் போக்குவரத்துகட்டணம்எரிபொருள்எண்ணெய்ஈரான்போர்