மேடான்: மலாக்கா நீரிணையில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அதிகாலையில் 21 மீனவர்களைக் கொண்ட ‘கேஎம் சம்பர் இண்டா II’ என்ற மீன்படிப் படகில் தீ விபத்து ஏற்பட்டது.
அச்சமயம் அவ்வழியே மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகான ‘கேம் மந்த்ரி’ என்ற படகு, தீப்பிடித்த படகில் இருந்த 13 மீனவர்களை மீட்டது. அந்த மீனவர்கள் தற்போது வட சுமத்ராவின் மேடான் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவ்விபத்தில் மூவர் மாண்டதுடன் இதுவரை ஐவரைக் காணவில்லை.
இந்த விவரங்களை இந்தோனீசிய வட்டாரக் கடற்படைத் தளபத்தியத்தின் பேச்சாளர் வாஹ்யு குர்னியவான் உறுதிப்படுத்தினார். உயிரிழந்தவர்களாக அடையாளம் காணப்பட்ட ஐயான், ஜஹார், புயித்தின் மீனவர்கள் மூவரின் பெயர்களை அவர் வெளியிட்டார்.

