டிக்டாக் அதிவேக வளர்ச்சியால் இணைய வர்த்தகத்தில் இணையும் லசாடா, ஷாப்பீ

டிக்டாக் அதிவேக வளர்ச்சியால் இணைய வர்த்தகத்தில் இணையும் லசாடா, ஷாப்பீ

1 mins read
032fd935-d42a-4d75-9c7d-a10ebf9389ef
வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள வட்டார இணைய வர்த்தக நிறுவனமான லசாடா கூட்டாக செயலாற்றுவதில் அதிக முக்கியத்துவம் தருகிறது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தென்கிழக்காசிய மின்வணிகச் சந்தையில் நிலவும் கடுமையான போட்டியை எதிர்கொள்ள, லசாடா , ஷாப்பீ ஆகிய முன்னணி நிறுவனங்கள் தங்களது வர்த்தகச் சந்தைக்கான திட்டங்களில் கூட்டாக இணைந்து செயல்படுவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.

‘டிக்டாக்’ செயலி மூலம் ஏற்பட்டுள்ள வர்த்தகச் சவாலை எதிர்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான செலவுகளைக் குறைக்கவும் இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

இணைய வர்த்தக ஆய்வு நிறுவனமான ‘மொமண்டம் ஒர்க்ஸ்’ தரவுகளின்படி, குறுகிய காலத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது ‘டிக்டாக் ஷாப்’ என்ற மின்வணிகத் தளம்.

அது, 2025ஆம் ஆண்டில் தென்கிழக்காசியாவின் ஒட்டுமொத்த விற்பனை மதிப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மின்வணிகத் துறை தற்போது வெறும் வளர்ச்சியைக் கடந்து, நிலையான லாபத்தை ஈட்டும் முதிர்ச்சியை எட்டியுள்ளது.

இதனால் கூகல், மெட்டா போன்ற தளங்களில் விளம்பரங்களுக்காக அதிகப் பணம் செலவிடுவதைக் குறைப்பதோடு, கூட்டாக இணைந்து சக நிறுவனங்களுடன் சந்தைப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சீனாவில் இந்தச் செயல்முறை பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

தென்கிழக்காசியாவிலும் இது மிக வேகமாகப் பரவி வருகிறது. மின்வணிக விற்பனையில் 10 முதல் 20 விழுக்காடு இணைந்து சந்தைப்படுத்தும் முறை பின்பற்றப்படுகிறது.

எனவே ஷாப்பீ லசாடா ஆகிய இரு நிறுவனங்களும் தங்களது சமூக ஊடக விளம்பரப் பிரபலங்களுக்கான ஊதியங்களை உயர்த்தி, அதிகப் படைப்பாளர்களை ஈர்க்க முயல்கின்றன.

குறிப்புச் சொற்கள்