உலகின் ஆக விலையுயர்ந்த பனிக்கூழ் ஜப்பானில்; விலை $8,600க்குமேல்

1 mins read
0ba9f0c7-3d3a-43cf-af3e-ee6c70743953
ஜப்பானைச் சேர்ந்த மிட்டாய் தயாரிப்பாளர் ஒருவர் உருவாக்கிய பனிக்கூழ், பணக்காரர்களுக்கு ஏற்றதாக அமையக்கூடும். படம்: CELLATO -

சில வகையான பனிக்கூழ்கள், சுவை காரணமாகப் பிரபலமாக உள்ளன. ஆனால், அண்மையில், ஜப்பானைச் சேர்ந்த மிட்டாய் தயாரிப்பாளர் ஒருவர் உருவாக்கிய பனிக்கூழ், பணக்காரர்களுக்கு ஏற்றதாக அமையக்கூடும். ஒரு கரண்டி பனிக்கூழின் விலை 880,000 யென் (S$8,600).

'பியாகுயா' என்றழைக்கப்படும் அதனை, கின்னஸ் உலகச் சாதனை, உலகின் ஆக விலையுயர்ந்த பனிக்கூழாக அதிகாரபூர்வமாய் அறிவித்துள்ளது.

சில விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு அந்தப் பனிக்கூழைத் தயாரித்தது, 'சலேட்டோ' எனும் நிறுவனம். உண்ணக்கூடிய தங்க இலைகள், உலர்ந்த சீஸ், 'சகே' மதுபானத்திலிருந்து செய்யப்பட்ட ஒரு வித மசியல் ஆகியவை அந்தக் பொருள்களில் அடங்கும்.

ஆனால் மிக முக்கியப் பொருள், இத்தாலியின் அல்பாவிலிருந்து பெறப்படும் "White phantom truffle' எனும் ஒரு விதமான தாவரம். அந்தத் தாவரத்தின் விலை, ஒரு கிலோகிராமுக்கு சுமார் 2 மில்லியன் யென் என்று கூறப்படுகிறது. அந்த அரிய வகை பொருள், 'சமையலறையின் வைரம்' என்றும் அழைக்கப்படுகிறது. பனிக்கூழைத் தயாரிக்க, ஒன்றரை ஆண்டாக நிறுவனத்தின் பேச்சாளர் கின்னஸிடம் கூறினார். திராட்சை மதுவகை, உயர்தர மீன்வகையின் கருச்சினை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்களால் செய்யப்படும் மற்ற சுவைகளைக் கொண்ட பனிக்கூழ்களைத் தயாரிக்க திட்டமுள்ளதாகவும் அவர் சொன்னார்.