லெபனான் தலைநகர் பெய்ரூட்மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

1 mins read
தென்லெபனானின் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் முற்றிலும் துடைத்தொழிக்கப்படும்: இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை
37969960-3827-4049-9f44-eaba71a2454b
பெய்ரூட்டில் உள்ள கட்டடம் ஒன்றின்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் கிளம்பிய கரும்புகை. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா போராளிகளின் கட்டமைப்புகள் வேரூன்றியுள்ளன என்று குற்றஞ்சாட்டி இஸ்ரேல் ராணுவம் அங்குத் தாக்குதல் நடத்தியுள்ளது.

மத்திய கிழக்குப் போர் விரிவடையும் சூழலில், லெபனானில் இயங்கும் பல்கலைக்கழகங்களின்மீது ஈரான் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஈரானுக்கு ஆதரவாகச் செயல்படும் ஹிஸ்புல்லா போராளிகள் இயங்கும் தென் லெபனானின் பல கிராமங்களை இஸ்ரேல் ஏற்கெனவே ஆக்கிரமித்துள்ளதோடு அவற்றை முற்றிலும் தரைமட்டமாக்கப் போவதாக மிரட்டி வருகிறது.

தாக்குதல் நடத்தவிருப்பதால், அப்பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அறிவிப்பு விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்