மத்திய கிழக்கு அமெரிக்கத் தூதரகங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதல்

மத்திய கிழக்கு அமெரிக்கத் தூதரகங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதல்

2 mins read
ஹொர்முஸ் நீரிணையைக் கடக்கும் எந்தக் கப்பலையும் தாக்கப்போவதாக ஈரான் புரட்சிக் காவல் படை எச்சரிக்கை
c58ea7dc-0ff2-48c7-95fc-d8b5bbe010b0
சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம். கடந்த 2005ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட படம். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஈரான்மீதான தாக்குதல்கள் நீண்டநாள்கள் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கும் நேரத்தில், சவூதி அரேபியாவில் இயங்கும் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதற்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஏவிய இரு ஆளில்லா வானூர்திகள் அந்தத் தாக்குதலை நடத்தியதாக நம்பப்படுகிறது. வட்டாரப் பதற்றத்தை முன்னிட்டு, குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் ஹொர்முஸ் நீரிணையைக் கடக்கும் எந்தக் கப்பலையும் தாக்கப்போவதாக ஈரான் புரட்சிக் காவல் படையின் மூத்த அதிகாரி விடுத்துள்ள எச்சரிக்கை அவ்வட்டாரத்தில் மேலும் பதற்றத்தைக் கூட்டியுள்ளது.

ஈரான் போர் தொடர்வதால் ஆசியாவுக்கான எரிவாயுவுக்கும் கச்சா எண்ணெய்க்கும் மாற்று விநியோகிப்பாளர்களைப் பலநாள்களாக வர்த்தகர்கள் தேடிவருகின்றனர் என்று புளூம்பர்க் ஊடகம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நிலவரத்தை அனைத்துலக பணநிதியம் (IMF) கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளது. வர்த்தகத்துக்கும் பொருளியலுக்கும் தடைகள், எரிவாயுவின் விலை அதிகரிப்பு, நிதிச் சந்தை நிலையற்று இருப்பது ஆகியவற்றைப் பணநிதியம் கவனித்துள்ளது. போர் நீடிக்கும் காலத்தைப் பொறுத்தே மத்திய கிழக்கிலும் உலக அளவிலும் ஏற்பட்டிருக்கக்கூடிய பொருளியல் பாதிப்பைக் கணிக்க முடியும் என்று நிதியம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நிலவரத்தை அனைத்துலக பணநிதியம் கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளது. வர்த்தகத்துக்கும் பொருளியலுக்கும் தடைகள் ஏற்படுவதையும் எரிவாயுவின் விலை அதிகரிப்பதையும் நிதிச் சந்தை நிலையற்று உள்ளதையும் நிதியம் கவனித்துள்ளது. போர் நீடிக்கும் காலத்தைப் பொறுத்தே மத்திய கிழக்கிலும் உலக அளவிலும் ஏற்பட்டிருக்கக்கூடிய பொருளியல் பாதிப்பைக் கணிக்க முடியும் என்று நிதியம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் இதுவரை ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 787 ஆக பதிவிடப்பட்டுள்ளது என்று அரசாங்க ஊடகம் செம்பிறை இயக்கத்தைக் குறிப்பிட்டு தெரிவித்துள்ளது.

பெய்ரூட், டெஹ்ரான் ஆகிய இடங்களை இஸ்ரேல் ஒரே நேரத்தில் தாக்கப்போவதாக அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) ஜெரூசலத்தில் பல குண்டுவெடிப்புகள் கேட்டதாக ஏஎஃப்பி ஊடகவியலாளர்கள் செய்தி வெளியிட்டுள்ளளனர். அதற்கு முன்னதாக ஈரானில் இருந்து ஏவுகணைகள் பாய்ச்சியதைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. அவற்றைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை எடுத்துவருவதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
தூதரகம்அமெரிக்காசவூதி அரேபியாகுவைத்