மீண்டும் தொடங்கியது ஈரான்-அமெரிக்கா சண்டை

மீண்டும் தொடங்கியது ஈரான்-அமெரிக்கா சண்டை

2 mins read
bf772511-b8a6-4abc-9459-6527e22c83c0
திங்கட்கிழமை (ஜூலை 27) எடுக்கப்பட்ட இப்படத்தில் காணப்படும் ஈரான் தலைநகர் டெஹ்ரான். - படம்: இபிஏ
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: ஈரான் பாய்ச்சிய பல ஏவுகணைகளைத் தாங்கள் முறியடித்ததாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தெரிவித்தது.

இதைப் பற்றி அமெரிக்க மத்திய தளபத்தியம் எக்ஸ் தளத்தில் தெரிவித்தது. ஈரான் எந்தப் பகுதியைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது என்ற விவரத்தை அமெரிக்க மத்திய தளபத்தியம் குறிப்பிடவில்லை.

இருதரப்புக்கும் இடையே சில நாள்களாக சண்டை இடம்பெறாமல் இருந்தது. இப்போது மீண்டு பூசல் தொடங்கியிருக்கிறது.

ஜோர்தானில் உள்ள அமெரிக்க ஆகாயத் தளம், அமெரிக்க மத்திய தளபத்திய நிலையம் ஆகியவற்றைத் தாங்கள் குறிவைத்ததாக ஈரானின் புரட்கிக் காவற்படை பின்னர் கூறியது. ஈரானின் அக்கறைகளுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்குத் தாங்கள் பதிலடி தந்ததாக ஈரான் தெரிவித்தது.

ஜோர்தானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம்மீது ஈரான் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகவும் அவை முறியடிக்கப்பட்டதாகவும் முன்னதாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம், அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தெரிவித்தது.

எண்ணெய் விலை அதிகரிப்பு

இந்நிலையில், மத்திய கிழக்கில் மறுபடியும் சண்டை தொடங்கியதையடுத்து, எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்குப் பூசலால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் தொடர்கிறது.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை மூன்று விழுக்காட்டுக்கும் மேல் கூடி, பீப்பாய்க்கு US$87ஐ (S$112.43) தொடும் நிலைக்குச் சென்றது. அதேவேளை, வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட் எண்ணெய் விலை US$83ஐத் தொடவிருந்தது.

சவூதி அரேபியாவுக்கு நெருக்குதல்

இதற்கிடையே, ஈரான் ஆதரவுக் குழுக்கள் இரண்டாம் நாளாக சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எண்ணெய் நிலையங்கள்மீது வானூர்திகளைப் பாய்ச்சின.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) அந்தத் தாக்குதலை முறியடித்ததாக சவூதி தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பதை அது குறிப்பிடவில்லை.

தாக்குதலில் தங்களுக்குப் பங்கிருப்பதை ஈரான் மறுத்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஐஆர்ஐபி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மத்திய கிழக்கில் மறுபடியும் சண்டை வெடித்திருப்பதால் அரசதந்திர ரீதியாகப் பூசலுக்குத் தீர்வுகாண முடியுமா என்ற ஐயம் எழுந்துள்ளது. ஆறாவது மாதமாகப் போர் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
உலகம்அமெரிக்காஈரான்சண்டைஏவுகணை