இஸ்ரேலை நோக்கி ஈரானின் வானூர்தித் தாக்குதல்

இஸ்ரேலை நோக்கி ஈரானின் வானூர்தித் தாக்குதல்

1 mins read
ec4e74e6-d658-4d78-95a8-4fd9313e0a9a
முன்னதாக ஈரானின் பல பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

டெஹ்ரான்: தான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் தங்களை நோக்கி சுமார் 100 வானூர்திகளைப் பாய்ச்சியதாக இஸ்ரேலிய ராணுவம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தெரிவித்தது.

அந்த வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தத் தாங்கள் முயற்சி செய்து வருவதாக இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்டது.

நடான்ஸில் உள்ள முக்கிய யுரேனியம் செறிவூட்டல் வசதி உட்பட, வெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரானிய ஊடகங்களும் சாட்சிகளும் தெரிவித்தன.

“ஈரான் ஏறத்தாழ 100 ஆளில்லா வானூர்திகளை இஸ்ரேலை நோக்கிப் பாய்ச்சியது. அவற்றைத் தடுக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்,” என்று இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் எஃபி டெஃப்ரின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக தங்கள் 200 போர் விமானங்கள் ஈரானில் சுமார் 100 பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார்.

ஈரானின் உயர்மட்ட புரட்சிகர காவல்படை, அதன் உயர் தளபதி ஹொசைன் சலாமி கொல்லப்பட்டார் என்று கூறியதுடன், டெஹ்ரானில் உள்ள அந்தப் பிரிவின் தலைமையகம் தாக்கப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தலைநகரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்த தாக்குதலில் பல குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஈரான்இஸ்ரேல்தாக்குதல்வானூர்தி

தொடர்புடைய செய்திகள்