ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ஈரானில் இணையத் தடை

ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ஈரானில் இணையத் தடை

1 mins read
0b4775bc-33bb-4d35-8737-a851259285ef
ஈரானின் நாணய வீழ்ச்சிக்கு அடுத்து 12 நாளாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவதாக மனித உரிமைக் குழுக்கள் கூறி வருகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

டெஹ்ரான்: ஈரானில் தேசிய அளவிலான இணையத் தடை  வியாழக்கிழமை செயல்படுத்தப்பட்டதாக இணையக் கண்காணிப்பு அமைப்பான ‘நெட்புளோக்ஸ்’ தெரிவித்துள்ளது. 

அந்நாட்டில் தற்போது ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகையில் புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த முடிவு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெஹ்ரானிலும் மஷ்ஹாத், இஷ்ஃபஹான் ஆகிய பெருநகரங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு, சமய போதகர்கள் கொண்டுள்ள அந்நாட்டின் ஆட்சிமுறைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

1979 புரட்சியால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னால் ஈரானிய மன்னரின் மகன் ரெஸா பஹ்லவி,  ஆர்ப்பாட்டங்களை ஊக்குவிக்கும் பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் புதன்கிழமை பதிவிட்டார்.

ஈரானின் நாணய வீழ்ச்சிக்கு அடுத்து 12 நாளாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவதாக மனித உரிமைக் குழுக்கள் கூறி வருகின்றன.

ஆனால் நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் அமைதி நிலவுவதாக ஈரானிய அரசு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

டெஹ்ரான் சந்தையில் அடைப்பிலிருந்து தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் தற்போது நாடு முழுவதும் பரவி, மக்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளனர்.

பல்லாண்டுகளாக தனக்கு எதிராக நீடித்துள்ள வர்த்தகத் தடையாலும் கடந்த ஆண்டு ஜூன் இஸ்ரேலுக்கு எதிராகச் செய்துகொண்ட போராலும் ஈரானில் தற்போது நிதி நெருக்கடி நிலவுகிறது.

இதற்கிடையே, சொந்த நாட்டு மக்களை ஈரான் கொல்லத் தொடங்கினால் அந்நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்