தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிதி ஆதரவைக் காப்புறுதி நிறுவனம், வங்கிகள் வழங்க வேண்டும்: சீனா

தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிதி ஆதரவைக் காப்புறுதி நிறுவனம், வங்கிகள் வழங்க வேண்டும்: சீனா

1 mins read
29d2f323-aead-4487-a0e4-9bce10e498f4
ஹாங்காங் நகரில் ‘வாங் ஃபுக் கோர்ட்’ குடியிப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் காணாமற்போனவர்களைத் தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஹாங்காங்: ஹாங்காங் நகரில் ‘வாங் ஃபுக் கோர்ட்’ எனப்படும் வீடமைப்புக் கட்டடங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால், பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான நிதி உதவி சேவைகளை முழுமையாக வழங்குமாறு அந்நாட்டு வங்கிகள், காப்புறுதி நிறுவனங்களைச் சீன அரசாங்கம் கேட்டுகொண்டுள்ளது.

இதனை அந்நாட்டின் நிதி ஒழுங்குமுறை ஆணையம் சனிக்கிழமையன்று (நவம்பர் 29) தெரிவித்துள்ளது.

காப்புறுதி நிறுவனங்கள் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் கோரிக்கை தொகைக்கான விண்ணப்பங்களையும் பிற நடைமுறைகளையும் குறித்த நேரத்தில் கையாண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

மேலும், பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவ வேண்டும் என அந்த அறிக்கையில் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
சீனாதீவிபத்துகாப்புறுதி