கியூபாவில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; ஆயுதங்களுடன் சிக்கிய விசைப்படகு

கியூபாவில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு; ஆயுதங்களுடன் சிக்கிய விசைப்படகு

1 mins read
b4809fb4-77ae-40a5-b7a5-cb825bc1d3bb
அமெரிக்காவிலிருந்து வந்த கப்பலுடனான மோதலின்போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஹவானா: அமெரிக்காவிலிருந்து கியூபாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற ஆயுதமேந்திய 10 பேர் கும்பலின் திட்டத்தை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாக முறியடித்தனர்.

புதன்கிழமையன்று (பிப்[Ϟ]ரவரி 25) நடந்த இந்த மோதலில் கும்பலைச் சேர்ந்த 4 பேர் மாண்டனர்; எஞ்சிய 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். 

கியூபா அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஊடுருவல்காரர்களிடமிருந்து 13 துப்பாக்கிகள், 11 கைத்துப்பாக்கிகள், ஏறக்குறைய 13,000 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆளில்லா வானூர்திகளும் தகவல் தொடர்புச் சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

ராணுவ நிலைகளைத் தாக்கி, சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தவே இந்த ஊடுருவல் திட்டமிடப்பட்டதாகக் கியூபா குற்றம் சாட்டியுள்ளது. 

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கியூபா மீது பொருளியல் தடைகளை விதித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிடிபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட சாத்தியம் உள்ளது.

அமெரிக்கா இந்த விவகாரத்தை தன்னிச்சையாக விசாரிப்பதாக அறிவித்தாலும் அதில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என கியூபா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்