இந்திய மைனாவால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பா? குவைத் விளக்கம்

இந்திய மைனாவால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பா? குவைத் விளக்கம்

1 mins read
d4190dbb-ee7f-4c98-b4dd-9828e4c96072
இந்திய மைனாக்கள். - படம்: டுவிட்டர்/குவைத் செய்தி நிறுவனம்
multi-img1 of 3
Google News Preferred Icon

குவைத்: இந்திய மைனாவால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை என்றும் அவற்றால் வனஉயிர்ச் சூழலுக்கு நன்மையே விளைகிறது என்றும் அரபு நாடான குவைத் தெளிவுபடுத்தியுள்ளது.

பலவகைப்பட்ட ஒலிகளை எழுப்பக்கூடிய மைனா அறிவுக்கூர்மைமிக்க பறவை என்றும் அது பல்வேறு சூழல்களுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் தன்மை படைத்தது என்றும் ‘குவைத் சுற்றுச்சூழல் ஆடிகள்’ அமைப்பின் தலைவர் ரஷீத் அல் ஹாஜி தெரிவித்தார்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மைனாக்கள் குவைத்தில் தென்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய மைனா, பெரும்பாலும் அரபுத் தீபகற்பத்தின் அழையா விருந்தாளியாகப் பார்க்கப்படுகிறது.

ஆயினும், அது சவால்மிக்க உள்ளூர்ச் சூழலுக்குப் பழகிக்கொள்கிறது.

பொதுவாக, இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மைனா குஞ்சுபொரிக்கும் பருவமாகக் கூறப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில், செங்குத்துப்பாறைகளின் விளம்புகளிலும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள கட்டடங்களிலும் அவை கூடுகட்டும்.

குறிப்புச் சொற்கள்