வளைகுடாவில் ‘மிக மோசமான’ எண்ணெய்க் கசிவு

வளைகுடாவில் ‘மிக மோசமான’ எண்ணெய்க் கசிவு

1 mins read
6cfff1ec-9cb7-4f1d-a54f-3ee5e1286917
ஓமான் கடற்கரைக்கு அருகே நிகழ்ந்துள்ள எண்ணெய்க் கசிவைக் காட்டும் செயற்கைக்கோள் படம். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லண்டன்: வளைகுடா வட்டாரத்தில் பெரிய அளவில் இருக்கும் எண்ணெய்க் கசிவு உலகின் ஆக மோசமான எண்ணெய்க் கசிவுச் சம்பவங்களில் ஒன்றாக உருவெடுத்துவருகிறது என்று அனைத்துலக அமைப்புகள், சுற்றுச்சூழல் குழுக்கள் போன்றவை எச்சரித்துள்ளன.

பல வாரங்களாக எண்ணெய்க் கசிவைக் கவனிக்காமல் அதை மோசமடைய விட்டது காரணம் என்று அவை கூறுகின்றன.

ர‌ஷ்ய கச்சா எண்ணெய்யை ஏற்றிச் சென்ற கப்பல், ஓமான் கடற்கரைக்கு அருகே நிறுத்தப்பட்டிருக்கிறது. அதிலிருந்து கசிந்த எண்ணெய் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) கரைக்கு வந்துவிட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) கப்பல்துறை அமைப்பு தெரிவித்தது.

அந்த எண்ணெய்க் கசிவு தற்போது 2,000க்கும் அதிகமான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஓமான்எண்ணெய்க் கசிவுவளைகுடாஎச்சரிக்கைமத்திய கிழக்குர‌ஷ்யா