தொழில்நுட்பக் கோளாற்றால் முடங்கிய கிரீஸ் விமான நிலையங்கள்

தொழில்நுட்பக் கோளாற்றால் முடங்கிய கிரீஸ் விமான நிலையங்கள்

1 mins read
3991be16-c884-4059-b40b-4059a9028ae0
காலை 9 மணிக்குத் தொடங்கிய பிரச்சினை மாலை நான்கு மணிவரை தொடர்ந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) கிரீஸ் நாட்டில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் முடங்கின.

விமானங்கள் தரையிறங்கவில்லை. அதேபோல் புறப்படவும் இல்லை.

வானொலி அலைவரிசையில் ஏற்பட்ட பிரச்சினையால் விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டதாகக் கிரேக்க விமான ஆணையமும் கிரேக்க அரசாங்கத்தின் தொலைக்காட்சியும் தெரிவித்தன.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை 9 மணிக்குத் தொடங்கிய பிரச்சினை மாலை 4 மணிவரை தொடர்ந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்
கிரீஸ்விமானப் போக்குவரத்துதொழில்நுட்பம்