போட்டியாக உள்ள நிறுவனத்தில் $40 பில்லியன் முதலீடு செய்யும் கூகல்

போட்டியாக உள்ள நிறுவனத்தில் $40 பில்லியன் முதலீடு செய்யும் கூகல்

1 mins read
a7a3b94f-5071-4848-bd1f-33ed1e79ede1
ஆந்திரோபிக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது 350 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. - படம்: ஃபுளூம்பர்க்
Google News Preferred Icon

நியூயார்க்: உலகின் முன்னணி நிறுவனமாக உள்ள கூகலின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தனக்குப் போட்டி தரும் ஆந்திரோபிக்கில் (Anthropic) 40 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்யவுள்ளது.

ஆந்திரோபிக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது 350 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது.

கூகல், ஆந்திரோபிக்கில் 10 பில்லியன் அமெரிக்க டாலரும் செயல்திறன் இலக்குகளை வெற்றிகரமாக எட்டினால் கிளாட் (Claude) தளத்தில் 30 பில்லியன் டாலர் வரையிலான முதலீடுகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கூகல் வழங்கும் நிதியால் ஆந்திரோபிக் அதன் செயல்பாட்டுத் திறனை மேலும் பல மடங்கு அதிகமாக்கும் என்று கூறப்படுகிறது.

ஆந்திரோபிக்கின் ஆண்டு வருமானக் குறியீடு இம்மாதம் 30 பில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்தது. 2025ஆம் ஆண்டு முடிவில் அது 9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

அண்மையில் அமேசான் நிறுவனமும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களைக் குறிவைத்து 25 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் பல பில்லியன் டாலரை முதலீடு செய்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்