தங்க விலை 2026ஆம் ஆண்டில் மிகவும் உயரும்: ஆய்வாளர்கள்

1 mins read
cf09860b-0922-4893-a395-987090d50ba7
கடந்த அக்டோபர் மாதம் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள நகைக் கடையில் தங்கக் கட்டியைக் காட்டும் ஊழியர். - படம்: ராய்ட்டர்ஸ்

அடுத்த 2026ஆம் ஆண்டு தங்கத்தின் விலை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அதன் வணிகத்தை ஆய்வு செய்யும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்த 2025ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் தங்க விலை கணிசமாக உயர்ந்து வந்துள்ளது. மத்திய வங்கியின் போக்கு, அரசாங்க கொள்கை மாற்றம், உலகளாவிய வணிகர்களின் வர்த்தக நடவடிக்கைகள் அதற்கான காரணம் என்று அறியப்படுகிறது.

தங்கம் முதலீடு செய்வோர் மிதமான லாபத்தையே எதிர்பார்க்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அடுத்த ஆண்டு இறுதிக்குள்ளாக ஒரு கிராம் தங்கம் $200 முதல் $300 வெள்ளியையும் கடக்கும் வாய்ப்புள்ளது என்று அவர்கள் கணித்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக சீனா, போலந்து, துருக்கி ஆகிய நாடுகள் அவற்றின் தங்கச் சேமிப்புகளை கணிசமாக அதிகரித்து வந்துள்ளன. கடந்த ஓராண்டில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் 254 டன் அளவுக்கு தங்கம் வாங்கியுள்ளன.

குறிப்புச் சொற்கள்