சோல்: தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு, நாட்டை ராணுவ ஆட்சியின்கீழ் கொண்டுவர முயன்றதன் தொடர்பில் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவசரக்காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த யூன் மேற்கொண்ட முயற்சி, நாட்டில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து அதிருப்தி தெரிவித்த திரு யூன், நாட்டின் நன்மைக்காகத்தான் ராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்த எண்ணியதாகக் கூறினார்.
65 வயதான திரு யூன், ஆயுள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
பொதுவாகத் தென்கொரியாவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர் 20 ஆண்டு காலத் தண்டனைக்குப் பிறகுதான் பரோலில் வெளிவர அனுமதி கிடைக்கும்.

