முன்னாள் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ கைது

முன்னாள் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ கைது

1 mins read
6006aaba-9df0-4f27-bccd-889a1101f1bb
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்சின் இளைய சகோதரர் ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன் விண்ட்சர். - படம்: இபிஏ

லண்டன்: அதிகாரத்தைத் தவறாகக் கையாண்ட சந்தேகத்தின்பேரில் பிரிட்டிஷ் மன்னர் சார்ல்சின் இளைய சகோதரர் ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன் விண்ட்சரைக் காவல்துறை கைதுசெய்திருப்பதாக பிபிசி தொலைக்காட்சிச் செய்தி தெரிவிக்கிறது.

வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 19) கிழக்கு இங்கிலாந்தின் சேன்ரிங்ஹம் எஸ்டேட் பகுதியிலுள்ள ‘உட் பண்ணை’யில் ஆறு காவல்துறை கார்களையும் சாதாரண உடையில் இருந்த எட்டு அதிகாரிகளையும் காண முடிந்ததாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மறைந்த அமெரிக்க நிதி ஆலோசகரும் பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களை மவுன்ட்பேட்டன் விண்ட்சர் வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று தேம்ஸ் பள்ளத்தாக்குக் காவல்துறை முன்னர் தெரிவித்திருந்தது.

அமெரிக்க அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட கோப்புகளின் அடிப்படையில், மவுன்ட்பேட்டன் விண்ட்சர்மீது காவல்துறை சந்தேகப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆயினும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என மறுத்துவரும் மவுன்ட்பேட்டன் விண்ட்சர், ஆயினும் எப்ஸ்டீனுடன் நட்புறவு கொண்டதற்காக வருந்துவதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்