பங்ளாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசினாவுக்கு 10 ஆண்டு சிறை

பங்ளாதேஷ் முன்னாள் பிரதமர் ஹசினாவுக்கு 10 ஆண்டு சிறை

2 mins read
40924b8a-a9b4-4208-9fb7-da63a72b5101
79 வயதான ஷேக் ஹசினாவுக்கு பங்ளாதேஷ் நீதிமன்றம் 10 சிறைத் தண்டனை விதித்துள்ளது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

டாக்கா: பங்ளாதேஷின் முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசினாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பங்ளாதேஷ் நீதிமன்றம் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் 79 வயதான ஷேக் ஹசினாவுக்கு பத்தாண்டுச் சிறை விதிக்கப்பட்டது.

அரசு வீட்டுவசதித் திட்டமொன்றில், அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஷேக் ஹசினா மீது குற்றச்சாட்டுகள் பதிவான நிலையில், நீதிமன்ற விசாரணையில் அவை நிரூபிக்கப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் ஒருவரான மூத்த அதிகாரி குர்ஷித் ஆலம் என்பவர் மட்டுமே நேரில் விசாரிக்கப்பட்டார்.

அந்த வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவருடைய உறவினர்களான முஜீப் சித்திக், துலீப் ரிச்வானா சித்திக், ஆஸ்மினா சித்திக் ஆகியோருக்கும் பிறருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தலா 1 லட்சம் டக்கா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

“இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்த போதிலும் பங்ளாதேஷ் அதிகாரிகள் என்னைத் தொடர்புகொள்ளவில்லை,” என்று திருவாட்டி ஹசினா சொன்னதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

“எனக்கு அழைப்பாணை அனுப்பப்படவில்லை. எந்தக் கடிதப் போக்குவரத்தும் இல்லை. என்னைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல,” என்றும் அவர் கூறினார்.

இங்கிலாந்து, பங்ளாதேஷ் ஆகிய நாடுகளில் வழக்கறிஞர்களை ஈடுபடுத்தியுள்ளதாகக் அவர் கூறினார்.

பங்ளாதேஷில் ஆட்சி மாற்றத்தை விளைவித்த மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசினா, இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வரும் பங்ளாதேஷில் இம்மாதம் 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்