முன்னாள் அதிமுக எம்பி இளவரசன் கட்சியில் இருந்து விலகினார்

முன்னாள் அதிமுக எம்பி இளவரசன் கட்சியில் இருந்து விலகினார்

1 mins read
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்வி: இளவரசன்
0db8e5fa-70f9-451b-bdc5-57b73db71a67
முன்னாள் அதிமுக எம்பி இளவரசன். - படம்: மாலை மலர்
Google News Preferred Icon

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் (எம்பி) அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளருமான இளவரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை (மே 29) அறிவித்துள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தாம் விலகுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் (இபிஎஸ்) தலைமையில் கட்சி போட்டியிட்ட தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்துள்ளதாகத் தெரிவித்த இளவரசன், அவற்றுக்கு இபிஎஸ் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

பிரிந்த அதிமுக அணிகள்

பிரிந்துள்ள அதிமுகவின் அணிகளை ஒன்று சேர்க்கும் நடவடிக்கைகளைத் தலைவர் எடுக்கவில்லை எனவும் அவர் கவலை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்