இந்தோனீசியாவில் பிறந்த முதல் ராட்சத பாண்டா பொதுமக்கள் பார்வைக்கு வந்தது

இந்தோனீசியாவில் பிறந்த முதல் ராட்சத பாண்டா பொதுமக்கள் பார்வைக்கு வந்தது

1 mins read
bbcebb06-3665-4f76-aac3-8d3c8e373fa3
சத்ரியோ “ரியோ” விராத்தாமா பாண்டா குட்டி. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

போகோர்: இந்தோனீசியாவில் பிறந்த முதல் ராட்சத பாண்டா கரடி முதன்முறையாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சத்ரியோ “ரியோ” விராத்தாமா எனும் பாண்டா, மேற்கு ஜாவா மாநிலம், போகோர் நகரின் சிசாருவா மாவட்டத்தில் இருக்கும் தாமான் சஃபாரி வனவிலங்குப் பூங்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) முதன்முறையாகப் பொதுமக்களின் பார்வைக்குக் காட்சியிடப்பட்டது. இந்த இளம் பாண்டாவைக் காண பார்வையாளர்கள் திரண்டனர்.

பார்வையாளர்கள் பலர் நீண்ட தூரம் பயணம் செய்து பொறுமையாக வரிசையில் காத்திருந்தனர். இந்நிகழ்வை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அவர்கள் வகைப்படுத்தினர்.

ரியோவின் பிறப்பு ஒரு பெரிய சாதனை என்றும் பார்வையாளர்கள் சிலர் வகைப்படுத்துகின்றனர். மாணவர்கள் இதைக் காண பள்ளிகள் சில பயணங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

ரியோ சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி பிறந்தது. சாய் டாவ், ஹு சான் ‘தம்பதி’க்கு ரியோ பிறந்தது. அவ்விரு பாண்டாக்களும் 2017ஆம் அண்டு தாமான் சஃபாரி வனவிலங்குப் பூங்காவுக்குத் தருவிக்கப்பட்டன. 10 ஆண்டுகால கூட்டு ஆய்வுத் திட்டத்தின்கீழ் அவை கொண்டு வரப்பட்டன.

இந்தோனீசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்பின் சின்னமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்