வாஷிங்டன்: வால்ட் டிஸ்னி நிறுவனம் (Walt Disney) ஏறக்குறைய1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ‘வால் ஸ்திரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஆட்குறைப்பு நடவடிக்கை பெரும்பாலும் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவில் இருக்கும் என அச்செய்தி குறிப்பிட்டது.
கடந்த 2025 நிதியாண்டின் இறுதியில் டிஸ்னி நிறுவனம் கிட்டத்தட்ட 231,000 ஊழியர்களைக் கொண்டிருந்தது. தற்போதைய பணிநீக்கம் மொத்தப் பணியாளர்களில் 1 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களையே பாதிக்கும்.
செலவைக் குறைக்கவும், சந்தைப்படுத்தல் பிரிவை ஒருங்கிணைக்கவும் ‘புராஜெக்ட் இமேஜின்’ என்ற திட்டத்தின் கீழ் புதிய தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி ஆசாத் அயாஸ் இந்த மாற்றங்களை முன்னெடுத்துள்ளார்.
இது குறித்து டிஸ்னி நிறுவனம் அதிகாரபூர்வமாக இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

