சீனப் பட்டாசு ஆலை வெடிப்பில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனப் பட்டாசு ஆலை வெடிப்பில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
2306422b-ac38-4eff-bb06-81740646ff97
மே 6ஆம் தேதி லியுயாங்கில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம், 2019க்குப் பிறகு சீனாவில் நடந்த ஆக மோசமான வெடிப்புச் சம்பவமாகக் கருதப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீனாவின் ஹுனான் பகுதியில் நடந்த பட்டாசு ஆலை வெடிப்பில் மாண்டோர் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.

இன்னும் ஒருவரைக் காணவில்லை என்று சீன அரசாங்க ஊடகமான சின்ஹுவா வெள்ளிக்கிழமை (மே 8) தெரிவித்தது.

பட்டாசுத் தயாரிப்பிற்குப் பெயர்பெற்ற லியுயாங்கில் மே 4ஆம் தேதி மாலை 4.40 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவம் 2019க்குப் பிறகு சீனாவில் நிகழ்ந்த ஆக மோசமான வெடிப்புச் சம்பவம் என்று கருதப்படுகிறது.

சம்பவ இடத்தில் தேடல், மீட்புப் பணிகள் நிறைவுபெற்றதாகவும் 51 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும் சின்ஹுவா தகவல் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கியுள்ளது. வெடிப்பில் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் எட்டுப் பேருக்குக் காவல்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.

இதற்கிடையே, பாதுகாப்புச் சோதனைகளை நடத்தும் பொருட்டு நகரிலுள்ள பட்டாசு ஆலைகள் அனைத்திலும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சீனாபட்டாசுஆலைவெடிப்புஉயிரிழப்புவிசாரணை