கோயிலைச் சேதப்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரானது: லத்தீஃபா கோயா

கோயிலைச் சேதப்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரானது: லத்தீஃபா கோயா

1 mins read
391ccb0f-0534-4c07-aa3c-078342bef21b
பிரபல வழக்கறிஞர் லத்தீஃபா கோயா. - படம்: தமிழ் மலர்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: இஸ்லாத்தை ஏற்றிருக்கும் எந்தவொரு தரப்பினரும் மற்ற சமய வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்தமாட்டார்கள் என்றும் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் பிரபல வழக்கறிஞர் லத்தீஃபா கோயா தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராகச் செயல்படுவது மனித உரிமை மீறல் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும் என தேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குநருமான திருவாட்டி லத்தீஃபா கோயா தெரிவித்தார்.

அதிகாரமும் அரசியல் பலமும் உள்ள ஒரு பெரும்பான்மை சமூகம் பலவீனமான சிறுபான்மையினரைக் குறிவைத்து இப்படியானத் தாக்குதலை நடத்துவது கோழைத்தனமானது என லத்தீஃபா கோயா கடுமையாகச் சாடினார். ஒரு சில தரப்பினர்கள் தங்களைப் பெரும்பான்மையினர் என காட்டிக்கொண்டு இந்தியர்களின் நம்பிக்கைகளின் மீது தாக்குதல் நிகழ்த்துவதை அரசு கண்டும் காணாது இருக்கக்கூடாது என லத்தீஃபா வலியுறுத்தினார்.

அரசு அல்லது தனியார் நிலங்களில் கட்டப்பட்டிருக்கும் கோயில்களுக்கு எதிராகப் பிரதமர் அன்வார் தெரிவித்த ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி போய், ரவாங் பெர்டானா உச்சி மலை முனீஸ்வரர் ஆலயத்தை இரவோடு இரவாக அடித்து நொறுக்கியுள்ளது.

அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பாதுகாக்க நினைக்கும் எந்தவொரு தரப்பினரும் இஸ்லாத்தை மீறியவர்களாகத் தாம் கருதுவதாக லத்தீஃபா கடுமையாகச் சாடினார்.

இதனால், இரண்டு சமூகங்களுக்கும் இடையில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என வழக்கறிஞர் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்