ஊழல் குற்றச்சாட்டு: இந்தோனீசியக் குடிநுழைவுத் துணை அமைச்சர் கைது

ஊழல் குற்றச்சாட்டு: இந்தோனீசியக் குடிநுழைவுத் துணை அமைச்சர் கைது

1 mins read
இரண்டு நாள்களில் கைதான இரண்டாவது அரசாங்க உயர் அதிகாரி
f24ec4ae-ead3-41bb-86b1-f8db21f16558
இந்தோனீசியத் தலைமைச் சட்ட அலுவலகம் அதிபரின் இலவச உணவுத் திட்டத்தின் முன்னாள் தலைவரைக் கைது செய்தது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஊழல் தடுப்பு முகவை (கேபிகே) அந்நாட்டின் குடிநுழைவுத் துறையின் துணை அமைச்சரைக் கைது செய்துள்ளது.

இரண்டு நாள்களில், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் இரண்டாவது உயர் அதிகாரி அவர். அதனை கேபிகே அமைப்பின் பேச்சாளர் புடி பிராசெட்யோ வியாழக்கிழமை (ஜூன் 4) உறுதி செய்தார். மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

இந்தோனீசியாவின் தலைமைச் சட்ட அலுவலகம் டடான் இன்டயானா என்ற முன்னாள் இலவச உணவுத் திட்டத்தின் தலைவரைக் கைது செய்த மறுநாள் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டடான் இன்டயானா, அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட அமைப்பை நிர்வகித்தவர்.

அரசாங்கம் அறிமுகப்படுத்தியத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் நடந்த ஊழல் சம்பந்தமாக அவர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இரு கைதுகளுக்கும் தொடர்பில்லை

அவரது வழக்குக்கும் குடிநுழைவுத் துறை துணை அமைச்சர் கைதுக்கும் தொடர்பு இல்லை.

ஊழல் தடுப்பு முகவையில் புதன்கிழமை விசாரிக்கப்பட்ட சில்மி, மறுநாள் வியாழக்கிழமை காலையில் 10 மணிநேரம் கழித்து கைதியின் உடையில் வெளிவந்தது, அவரின் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்
இந்தோனீசியாஊழல்கைதுஅதிகாரி