அரசாங்கச் சேவைக் பயிற்சிக்கழக ஊழியர்மீது பணப்பை திருடியதாகக் குற்றச்சாட்டு

1 mins read
c085e088-c87a-43c1-89fd-b1b51f2a4f93
அரசாங்கச் சேவைக் கல்விக்கழக ஊழியர் ஒருவர் பணப்பை திருடிய குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். - கோப்புப் படம்

நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள மதுக்கூடத்தில் $150 ரொக்கப் பணம், இரண்டு கடன் அட்டைகள் மற்றும் ஒரு பற்று அட்டை அடங்கிய 550 டாலர் மதிப்புள்ள லூயிஸ் வூட்டன் பணப்பையைத் திருடியதாக ஊழியர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எண்டர்பிரைஸ் டெக்னாலஜி குழுமத்தின் கற்றல் தொழில்நுட்பக் கழகத்தின் மூத்த தயாரிப்பு நிபுணரான மில்டன் பாங் ஜியன்சின் (43) மீது டிசம்பர் 5ஆம் தேதி இக்குற்றம் சுமத்தப்பட்டது.

2024,ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அதிகாலை 1 மணிக்குச் சற்று நேரத்திற்கு சற்று முன்னதாக ‘மெடூசா‘ எனப்படும் மதுக்கூடத்தில் ஒரு நபரிடமிருந்து அவர் அந்தப் பணப்பையைத் திருடியதாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 6ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த அறிக்கையில் அரசாங்க சேவைப் பயிற்சிக்கழகப் (சிஎஸ்சி) பேச்சாளர், ‘‘குற்றச்சாட்டை எதிர்நோக்கும் பாங், தற்போது கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கு நீதிமன்றத்தில் முடிவடைந்த பிறகு இதன்தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகுறித்து பரிசீலிப்போம்,” என்றும் கூறினார்.

‘‘இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.  எனவே சட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும்போது கழகம் கருத்து தெரிவிக்க இயலாது,’’ என்றும் பேச்சாளர் சொன்னார்.

பாங்கின் வழக்கு ஜனவரி 16, 2026 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்