சீனாவும் பாகிஸ்தானும் வர்த்தகப் பாதையை வலுப்படுத்த முடிவு

சீனாவும் பாகிஸ்தானும் வர்த்தகப் பாதையை வலுப்படுத்த முடிவு

1 mins read
23f79ad0-c12b-4eeb-8bae-7caf545e42e8
பெய்ஜிங்கில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் மே 25ஆம் தேதி சந்தித்து உறவை மறுவுறுதிப்படுத்தினார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கராச்சி: சீனாவும் பாகிஸ்தானும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான கருத்திணக்கத்தை எட்டியுள்ளன.

கூட்டு வர்த்தகப் பாதையை மேம்படுத்துவது, பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தை வட்டார இணைப்பு நிலையமாக மாற்றுவது உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்கு இடையே இணக்கம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் தனது பெய்ஜிங் பயணத்தை முடித்துக் கொண்டபோது வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

ஆப்கானிஸ்தானுடனான பதற்றம், ஈரான் போரில் சமரசப்பேச்சு ஆகியவற்றுக்கு இடையே பாகிஸ்தான் முதலீடுகளை ஈர்க்க விரும்புகிறது.

“சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் வளர்ச்சியில் மூன்றாம் தரப்பு பங்கேற்பதை இரு தரப்பும் வரவேற்றன,” என்று சீன அதிபர் ஸி ஜின்பிங்கையும் பிரதமர் லி சியாங்கையும் சந்தித்த பிறகு திரு ஷரீப் தெரிவித்தார்.

சீனா-பாகிஸ்தான் திட்டங்களில் குஞ்செராப் கணவாய் மற்றும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முக்கியத் தரைவழி இணைப்பான காரகோரம் நெடுஞ்சாலையை மேம்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கும்.

மேலும் பாகிஸ்தானில் உள்ள சீனத் தொழிலாளர்கள் மற்றும் முதலீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை எடுக்க பாகிஸ்தான் உறுதி கூறியிருந்தது.

சீன குடிமக்கள் மற்றும் திட்டங்கள்மீது தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் பெய்ஜிங் கவலையடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சீனாபாகிஸ்தான்இருதரப்பு உறவு