சீனாவில் திறக்கப்பட்டு சில மாதங்களிலேயே பாதி கவிழ்ந்த பாலம்

சீனாவில் திறக்கப்பட்டு சில மாதங்களிலேயே பாதி கவிழ்ந்த பாலம்

1 mins read
4d812cae-fee6-4a85-8a7f-df83e887ee34
சம்பவம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) நிகழ்ந்தது. - படம்: சமூக ஊடகப் பயனர்
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பாலம் ஒன்றின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன.

சீச்சுவான் மாநிலத்தில் உள்ள ஹோங்சி என்ற இந்தப் பாலத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவையும் திபெத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் இந்தப் பாலம் அமைந்துள்ளது.

உயிர் சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

அருகே உள்ள மேடான பகுதிகளிலும் சாலைகளிலும் விரிசல்கள் காணப்பட்டதையும் மலைப்பகுதி பாதைகள் மாறியதையும் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) பிற்பகல் அதிகாரிகள் மயர்க்காங் நகரில் இருக்கும் 758 மீட்டர் நீளம்கொண்ட ஹோங்சி பாலத்தை வாகனப் போக்குவரத்துக்கு மூடினர்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் அருகிலுள்ள மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாலத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்தது.

ஹோங்சி பாலம் இவ்வாண்டு தொடக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டதாக ‘சீச்சுவான் ரோட் அண்ட் பிரிட்ஜ் குரூப்’ (Sichuan Road and Bridge Group) கட்டுமான நிறுவனம் சமூக ஊடகத்தில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்