பாத்தாம்: இந்தோனீசிய இணையச் சூதாட்ட மையம் ஒன்றை அந்நாட்டுக் காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.
பாத்தாம், ரெம்பாங், காலாங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள், பாத்தாமிலுள்ள சொகுசு வீடு ஒன்றிலிருந்து அந்த மையம் செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பீன்சை மையமாகக் கொண்ட நிறுவனத்தையும் கம்போடியக் கிளையையும் உள்ளடக்கிய பன்னாட்டுக் கும்பலின்கீழ் மையம் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த மையம், சுமார் 10 பில்லியன் ருப்பியா (S$714,343) அளவிலான பணத்தைக் கையாண்டு வருகிறது.
பாத்தாம் சிட்டி மாவட்டத்தின் சுக்காஜாடி துணை மாவட்டத்தில் உள்ள ‘தாமான் கோல்ஃப் ரெசிடென்ஸில்’ (Taman Golf Residence) அமைந்துள்ள மையத்தில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.
கைது நடவடிக்கையில் மூன்று சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டனர்.

