கலிஃபோர்னியாவில் பனிச்சரிவு; 8 பேர் மரணம்

கலிஃபோர்னியாவில் பனிச்சரிவு; 8 பேர் மரணம்

1 mins read
af04266a-d904-44da-b2d1-a52c69859ecb
கலிஃபோர்னியாவின் சியெரா மலையில் சிக்கியிருக்கும் பனிச்சறுக்கு வீரர்களைத் தேடிக் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) சென்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

லாஸ் ஏஞ்சலிஸ்: கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் காணாமற்போன 9 பனிச்சறுக்கு வீரர்களில் 8 பேர் மாண்டுவிட்டனர்.

எஞ்சிய ஒருவர் கடும் பனிப்புயலில் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. காவல்துறை புதன்கிழமை (பிப்ரவரி 18) அந்தத் தகவலை வெளியிட்டது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து மீட்புப் பணியாளர்கள், தாஹோ வட்டாரத்தில் கேசல் பீக் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியோரைத் தேடப் பெரிதும் முயற்சி எடுத்தனர். பனிச்சறுக்கு வீரர்கள் அறுவர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

“இன்னும் ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறோம்,” என்று நெவாடா வட்டாரத் தலைமைச் சட்ட அதிகாரி ‌ஷேனன் மூன் தெரிவித்தார். கடும்புயல் வீசுவதால் நடமாடுவது சிரமமாய் இருப்பதாக அவர் சொன்னார்.

பனிச்சரிவு மேலும் கடுமையாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

புயல் வீசும் இந்தக் காலத்திலும் வரும் நாள்களிலும் சியெரா மலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.

சியெரா நெவாடா மலைத் தொடரில் தொடர்ந்து பல அடி உயரத்திற்குப் பனி பொழிகிறது. மலையில் 3,500 அடிக்கும் மேலே, எட்டு அடி பனி பெய்திருப்பதாகவும் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசுவதாகவும் தேசிய வானிலைச் சேவை நிலையம் தெரிவித்தது.

நிலவரம் படுமோசமாய் இருப்பதாகவும் வானிலை நம்பமுடியாத அளவுக்கு ஆபத்து மிகுந்ததாய் உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காபனிச்சரிவுமரணம்காவல்துறைவிசாரணை