பெட்ரோல் குண்டு வீசி துணைக் காவல்துறை வாகனம் எரிப்பு

பெட்ரோல் குண்டு வீசி துணைக் காவல்துறை வாகனம் எரிப்பு

1 mins read
67125a23-bafb-4d96-aa5c-caef6a924750
பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட துணைக் காவல்துறை வாகனம். - படம்: மலேசியக் காவல்துறை
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள முத்தியரா தாமான்சரா பெருவிரைவு ரயில் நிலையத்திற்கு அருகே துணைக் காவல்துறை வாகனம் ஒன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 15) காலை பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது.

இச்சம்பவம் பின்னிரவு 1 மணியளவில் நிகழ்ந்ததாக ஹரியான் மெட்ரோ செய்தி குறிப்பிட்டது.

இதன் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஃபக்ருதீன் ஹமீத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அந்த ஆடவர் ஐந்து நொடிக் காணொளி ஒன்றைப் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

“காவல்துறை கார் ஒன்றை எரித்தது மனநிறைவு தருகிறது,” என்று அவர் அப்பதிவில் கூறியுள்ளார்.

அங்குள்ள பேருந்து நிறுத்தத்தின் கண்ணாடிச் சுவர்களில் வண்ணத் தெளிப்பான்களைக் கொண்டு மலேசிய அமைச்சர்களை இழித்துரைக்கும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக ‘ஃபிரீ மலேசியா டுடே’ செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபெட்ரோல் குண்டுகாவல்துறை